பாதுகாப்பு வழிகள்:
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலை பேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்கவேண்டாம் .
3.குழந்தைகள் தனி அறையில் இணைய த்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிக ளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந் தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தி ல் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாததே காரணம்
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும்போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்க வும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத் தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவா தீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணைய த்தில் பரப்பப்பட லாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்க ளையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கி ல்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர் வதை தவிர்க்கவும். தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண் டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரி யை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டு மே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்ப து பாதுகாப்பான வழியாகும்.
13. நீங்கள் ஏதேனும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால், சைபர் கிரைம் துறைக்குத் தெரிவிக்கவும் அல்லது ஆன்லைன் சைபர் கிரைம் போர்டல் https://cybercrime.gov.in/ மூலம் புகாரளிக்கவும்.